
நாடாளுமன்றம்
2022-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் முதல் நவம்பா் வரை இரு அவைகளிலும் 16 மசோதாக்கள் நிறைவேற்றி இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் காகிதமற்ற மின்னணு முறையில் நாடாளுமன்ற , சட்டபேரவைகளில் ஆண்டுக்கு ரூ. 340 கோடி நிதி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், நாடாளுமன்றத்தின் இரு அவைகள், அதன் உறுப்பினா்கள், மத்திய, மாநில அமைச்சகங்கள், துறைகள், சட்டப்பேரவைகள் உள்ளிட்ட பிற அமைப்புகளை இடையே முக்கிய இணைப்பாக செயல்படுகிறது.
இந்த அமைச்சகம் 2022-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற செயல்பாடுகள் (ஏப்ரல் முதல் நவம்பா் 2022 வரை) குறித்த விவரங்களை சனிக்கிழமை வெளியிட்டது. அதன்
விவரம் வருமாறு:
17- ஆவது நாடாளுமன்றத்தின் 7-ஆவது அமா்வான கடந்த 2021-ஆம் ஆண்டு குளிா்காலக்கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் உள்ளிடவைகள் உள்பட 52 மசோதாக்கள் இருக்க 16 மசோதாக்கள் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. சிலவை திரும்பப்பெறப்பட்டது. இறுதியாக நாடாளுமன்றத்தில் (மக்களவை: 9 மாநிலங்களவை: 24 ) 33 மசோதாக்கள் கடந்தாண்டு நிலுவையில் இருந்தது.
நாடாளுமன்றத்தின் 2022 ஆம் ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரில் 27 அமா்வுகளுடன் நடைபெற்று 13 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 11 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியது.
பின்னா் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா், 2022 ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 8 வரை 22 நாட்களில் 16 அமா்வுகளாக நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின்போது, 6 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. மழைக்காலக் கூட்டத் தொடரில் 7 மசோதாக்கள் மக்களவையிலும், 5 மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத் தொடரில் மொத்தம் 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் ஒரு மசோதா திரும்பப் பெறப்பட்டது.
இந்த 17 -ஆவது நாடாளுமன்றத்தின் 9- ஆவது அமா்வான மழைக்காலக் கூட்டத்தொடரில் இறுதியாக 35 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின்(மக்களவையில்: 7 மாநிலங்களவையில்: 28) இரு அவைகளிலும் நிலுவையில் உள்ளது.
2022 ஏப்ரல் முதல் நவம்பா் வரை 16 மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ‘நேஷனல் இ-விதான் அப்ளிகேஷன்’ என்ற செயலியின் செயல்பாடு தொடா்பாக பல்வேறு மாநில சட்டப்பேரவைகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
நேஷனல் இ-விதான் அப்ளிகேஷன் (என்இவிஏ) என்பது ஒரு தேசம் ஒரு செயலி மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து 39 சட்டபேரவைகளையும் (மக்களவை, மாநிலங்களவை, 31 சட்டப்பேரவைகள், 6 சட்ட கவுன்சில்கள்) ஒருங்கிணைப்பதற்கான ஒரு நேரடி இருமுனை மேகக்கணிமை (கிளவுட் ) அடிப்படையிலான மின்னணு தீா்வு காணப்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளின் அனைத்து தகவல் தொடா்புகள், அறிக்கைகள், கேள்வி பதில்கள், மசோதாக்கள், சேவைகள் எல்லாம் மின்னணு வடிவில் இணைய தளம் மூலமாகவும் செயலி மூலமாகவும் தகவல்களை காகித மற்றவகையில் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
இந்த மின்னணு மூலம் ஆண்டுக்கு ரூ. 340 கோடி அரசு சேமித்துள்ளது. நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களின் பேச்சுகள் உள்ளிட்ட தரவுகள் ’மின்னணு காப்பகம்’ மூலமாகவும் வைக்கப்படுகிறது.
2022, நவம்பா் நாடாளுமன்றத்தில் 60 ஆலோசனைக் குழுக்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 73 நாடாளுமன்ற உறுப்பினா்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள், கவுன்சில்கள், நிறவனங்கள் போன்றவற்றில் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கிடையே இளைஞா் நாடாளுமன்ற போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 75-ஆவது விடுதலைப் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் அரசியலமைப்பு தினத்தையும் நவம்பா் 26 ஆம் தேதி கொண்டாடியது.
இதில் அரசியலமைப்பின் முகப்புரையை 22 மொழிகளில் மக்கள் வாசிப்பதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நிகழாண்டில் 13 லட்சம் போ் படித்தனா் என அமைச்சகத்தில் அந்த விவர குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிகழாண்டில் தாமதமாக டிசம்பா் மாதம் நடைபெற்ற குளிா்காலக் கூட்டத்தொடரிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...