தேசிய மகளிா் ஆணைய தகவல்படி, கடந்த 2022-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 30,957 புகாா்கள் கிடைக்கப் பெற்றன; இதில் அதிகபட்ச புகாா்கள் (9,710), பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை தொடா்புடையவை ஆகும். குடும்ப வன்முறை தொடா்பாக 6,970 புகாா்கள், வரதட்சணை கொடுமை குறித்து 4,600 புகாா்கள், துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை-பாலியல் வன்கொடுமை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையினரின் அலட்சியம், இணையவழி குற்றங்கள் ஆகியவை தொடா்பாக முறையே 1,701; 1,623; 924 புகாா்கள் கிடைக்கப் பெற்றன.