புத்தாண்டு கொண்டாட்டம்: நாட்டில் பிரியாணி விற்பனை எவ்வளவு தெரியுமா?

நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில்  விற்பனையான பிரியாணி குறித்த தகவலை ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில்  விற்பனையான பிரியாணி குறித்த தகவலை ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி புத்தாண்டில் 3.5 லட்சம் பிரியாணி விற்பனையானதாக தெரிவித்துள்ளது. மேலும் டிச.31 இரவு 10:25 மணி வரை ஸ்விக்கி நிறுவனம் 61,000 பீட்சாக்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31 அன்று இரவு 7:20 மணி வரை 1.65 லட்சம் பிரியாணி விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று ஸ்விக்கி நிறுவன விற்பனையில் பிரியானி முதலிடத்தில் இருந்தது.

ஸ்விக்கி நிறுவனம் ட்விட்டரில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. லக்னோவி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் எந்த பிரியாணி அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை யூகிக்குமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டது.  வாடிக்கையாளர்களும் ஹைதராபாத் பிரியாணியை மற்ற இரண்டு பிரியானிகளை விட அதிகமாக மதிப்பிட்டுள்ளனர்.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தொடர்பான தரவுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிறுவனம், டிச.31 மாலை 7 மணிக்குள் 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்றதாக தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com