எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கிகள் முக்கியமானவை: ரிசர்வ் வங்கி

அரசுக்கு சொந்தமான எஸ்பிஐ, தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனங்களான ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை முக்கியமான வங்கிகள் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கிகள் முக்கியமானவை: ரிசர்வ் வங்கி

மும்பை: அரசுக்கு சொந்தமான எஸ்பிஐ, தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனங்களான ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை முக்கியமான வங்கிகள் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகள், தோல்வி அடைய முடியாத அளவுக்கு பெரிய வங்கிகளாகக் கருதப்படுகின்றன. இதன் காரணமாக இந்த வங்கிகள் நிதிச் சந்தைகளில் பல நன்மைகளை அனுபவித்து வருகின்றன.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை 2021 உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகள் பட்டியலில் உள்ள நிலையில் உள்நாட்டு அமைப்பு ரீதியாக அவை முக்கியமான வங்கிகளாக தொடர்ந்து அடையாளம் காணப்படுகின்றன என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளை உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகள் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதே வேளையில் மார்ச் 31, 2017 அன்று வங்கிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், எச்டிஎஃப்சி வங்கியும் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கி என வகைப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com