ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது கலை: கேரள முதல்வர்

கலை என்பது ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது, எந்த பாகுபாடும் வேறுபாடும் இன்றி அனைவரும் அதை அனுபவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 
பினராயி விஜயன் (கோப்புப் படம்)
பினராயி விஜயன் (கோப்புப் படம்)

கலை என்பது ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது, எந்த பாகுபாடும் வேறுபாடும் இன்றி அனைவரும் அதை அனுபவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 

ஆசியாவின் மிகப்பெரிய கலாசார நிகழ்வாகக் கருதப்படும் கேரள பள்ளியின் 61வது கலை நிகழ்ச்சியில் பினராயி விஜயன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், 

மாநிலத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை, ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் ஊக்குவிக்கும் மேடையாக இவ்விழா அமைய வேண்டும். 

கலை என்பது அனைத்து ஜாதி மதத்திற்கும் அப்பாற்பட்டது. எனவே, மாநிலத்தில் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில் இத்திருவிழாவை அனைவரும் ரசித்துப் பார்க்க வேண்டும்.

அப்போதுதான், கேரளம் தொடர்ந்து அமைதி, மகிழ்ச்சி மற்றும் மதச்சார்பின்மையின் மையமாக இருப்பதை உறுதி செய்ய முடியும். 

இந்நிகழ்ச்சியில் 14,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம், அனைவரும் வெற்றிபெற முடியாது, எனவே நிகழ்வில் பங்கேற்பதில் தான் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். 

பங்கேற்பதே ஒரு பெரிய சாதனையாகும், இந்த மனநிலையை மாணவர்களிடம் புகுத்த வேண்டும், பெற்றோர்களும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 

கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கலை நிகழ்ச்சி நடத்தமுடியவில்லை. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் கரோனா அதிகரித்துள்ளதை அனைவரும் கவனத்தில் வைத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com