
கோப்புப்படம்
நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி 27 ஆம் தேதி கலந்துரையாடுகிறார்.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை(பரிட்சா பே சர்ச்சா) நடத்தி வருகிறது.
இந்நிலையில் நடப்பு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். வருகிற ஜனவரி 27 ஆம் தேதி காணொலி மூலமாக இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேர்வினால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான உதவிக் குறிப்புகளை பிரதமர் மோடி, மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார் மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது, போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 2,050 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சகம் பரிசு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பொங்கலுக்கு 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு