சர்வதேச பயணிகளிடம் ஒமைக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டுபிடிப்பு

டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, சர்வதேச விமானப் பயணிகளிடம் நடத்தப்பட்ட கரோனா சோதனையில், இதுவரை ஒமைக்ரர்னின் 11 துணை திரிபுகள் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒமைக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டுபிடிப்பு
ஒமைக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டுபிடிப்பு

புது தில்லி: டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, சர்வதேச விமானப் பயணிகளிடம் நடத்தப்பட்ட கரோனா சோதனையில், இதுவரை ஒமைக்ரர்னின் 11 துணை திரிபுகள் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த 11 வகை துணை திரிபு வைரஸ்களும் ஏற்கனவே இந்தியாவில் கண்டறியப்பட்டவைதான் என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சர்வதேச பயணிகள் 19,227 பேரிடம் கரோனா சோதனை செய்யப்பட்டதில், 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த 124 பேரில் கரோனா மரபணு வரிசைமுறை சோதனை செய்யப்பட்ட 40 மாதிரிகளில் 14 பேருக்கு எக்ஸ்பிபி, எக்ஸ்பிபி.1 வைரஸ் பாதிப்பும், ஒருவருக்கு பிஎஃப் 7.4.1  வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், மக்கள் யாரும் தேவையில்லாமல் அச்சமடைய வேண்டாம் என்றும், ஆனால், அரசு வழிகாட்டுதல்படி எச்சரிக்கைரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com