
கோப்புப் படம்
தலைநகர் தில்லி உள்பட இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துசேரவேண்டிய விமானங்கள் அனைத்தும் தாமதமாக வந்துள்ளன.
ஏர் இந்தியா, மெல்போர்ன் செல்லும் விமானம் சுமார் 2:25 மணி நேரம் தாமதமானது.
துபாய் செல்லும் விமானம் 9:00 மணியிலிருந்து 10:50 மணிக்கு வந்ததாகவும், ஜெட்டா செல்லும் விமானம் 10:25 மணியிலிருந்து 13:10 மணிக்கு வந்ததாகவும், துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம், 7:30 மணியிலிருந்து 8:29 மணிக்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானம், காத்மாண்டுவுக்கு 1:02 மணி நேரம் தாமதமானது, வார்சா செல்லும் விமானம் 1:45 மணி நேரம் தாமதமானது, இஸ்தான்புல் செல்லும் விமானம் 6:55 மணிக்கு இயக்கப்பட வேண்டியது 7:38 மணிக்கு இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...