
பெங்களூரு: பெங்களூருவில் சமீபத்தில் அதிகளவில் நாய் விற்பனை நடந்தது. நகரின் பிரபல நாய் வளர்ப்பு நிறுவனமான கடபோம்ஸ் கென்னலின் உரிமையாளர் சதீஷ், ரூ.20 கோடிக்கு "காகேசியன் ஷெப்பர்டு" இன நாயை வாங்கி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
செல்லப்பிராணிகளை தங்களது வீடுகளில், நிறுவனங்களில் வளர்ப்பது என்பது தொழிலதிபர்கள், பணக்காரர்களுக்கு அலாதி பிரியம் கொண்டவர்கள் எனலாம்.
இந்நிலையில், கர்நாடகம் மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.20 கோடிக்கு வாங்கியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரும், பெங்களூருவில் உள்ள கட போம்ஸ் கென்னல்ஸ் என்ற நாய் விற்பனை கடை வைத்திருப்பவர் சதீஷ். இவர், ஹைதராபாத்தில் உள்ள நாய் விற்பனையாளரிடம் இருந்து "காகேசியன் ஷெப்பர்டு" இன நாயை ரூ.20 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். ஒன்றரை வயதுடைய அந்த நாய்க்கு 'கடபோம் ஹைடர்' என பெயர் சூட்டியுள்ளார்.
"காகேசியன் ஷெப்பர்டு" எனும் அரிய வகை நாய் துருக்கி, சிர்கசியா, ஜார்ஜியா, அஜர்பைஜான், ஒசேஷியா, தாகெஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படுபவை, ரஷியாவின் சில பகுதிகளுக்கு சொந்தமானது. காகேசியின் ஷெப்பர்டு இன நாய். இந்த வகை நாய் இந்தியாவில் காணப்படுவது மிகவும் அரிது.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹைதராபாத்தை சேர்ந்த நண்பரிடம் இருந்து ரூ.20 கோடி கொடுத்து "காகேசியின் ஷெப்பர்டு" இன நாயை வாங்கியுள்ளேன்.
திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் 'கடபோம் ஹைடர்' கலந்துகொண்டு 32 பதக்கங்களை வென்றுள்ளது. கடபோம் ஹைடர் அனைவருடனும் பாசத்துடன் பழகி வருகிறது. "இதற்கு தற்போது எனது வீட்டில் தனியாக குளிரூட்டப்பட்ட அறை ஒதுக்கியுள்ளேன் என கூறினார்.
https://www.instagram.com/p/CnEJlDLLIIz/
அப்படி என்ன சிறப்பு?
காகேசியன் ஷெப்பர்டு இன நாய்கள் மிகவும் தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை, அறிவுத்திறன், இரக்கம் மிகுந்தவை. காகேசியின் ஷெப்பர்டு ஒரு பாதுகாவலர் இனமாகும். இந்த வகை நாய்கள் 10 முதல் 12 ஆண்டுகள் உயிர்வாழக் கூடியவை. இதன் சராசரி உயரம் 23-30 அங்குலங்கள் மற்றும் அதன் எடை 45 முதல் 77 கிலோ வரை இருக்கும். இந்த வகை நாய்கள் வீட்டிற்குள் நுழையும் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும் அந்நியர்களை அரவணைக்கும் பண்பு உடையது.
நாய் வளர்ப்பவர்களில் விலையுயர்ந்த இன நாய்களை வாங்கி வளர்ப்பவர் தொழிலதிபர் சதீஷ். இந்தியாவில் இரண்டு கொரியாவைச் சேர்ந்த தோசா மஸ்திப் இன நாயை வைத்திருந்த முதல் நபர். அதன் விலை ரூ. தலா 1 கோடி. இவர் ஏற்கனவே, திபெத்தியன் மஸ்திப் இன அரிய வகை நாயை ரூ.10 கோடிக்கும், அலஸ்கன் மலமுடே இன அரிய வகை நாயை ரூ.8 கோடிக்கும் வாங்கியுள்ளார். இவர் சீனாவில் இருந்து நாய்களை இறக்குமதி செய்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ரேஞ்ச் ரோவரில் அவர்களை அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதீஷ் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் கடபோம் ஹைடரை அறிமுகப்படுத்த "மெகா நிகழ்ச்சி" நடத்த திட்டமிட்டுள்ளார்.