டிக்கெட் இல்லை! பயணியை கடுமையாகத் தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்! (விடியோ)

பிகாரில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவரை டிக்கெட் பரிசோதகர்கள் இருவர் சேர்ந்து கடுமையாக தாக்கும் விடியோ வெளியாகியுள்ளது. 
பயணியை கடுமையாகத் தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்
பயணியை கடுமையாகத் தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்


பிகாரில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவரை டிக்கெட் பரிசோதகர்கள் இருவர் சேர்ந்து கடுமையாக தாக்கும் விடியோ வெளியாகியுள்ளது. 

இருக்கையிலிருந்து கீழே வர மறுத்த நபரை டிக்கெட் பரிசோதகர்கள் கீழே இழுத்து காலணியால் முகத்தில் கடுமையாக மிதித்துள்ளனர். இந்த விடியோ பலரால் பகிரப்பட்டது. இதன் எதிரொலியாக டிக்கெட் பரிசோதகர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மும்பை - ஜெயின் நகர் சென்றுகொண்டிருந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் இருவர், பயணிகளிடம் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். தோலி ரயில் நிலையம் அருகே வரும்போது, மேல் இருக்கையில் இருந்த பயணியிடமிருந்து டிக்கெட் கேட்டுள்ளனர். 

அந்த பயணியிடம் டிக்கெட் இல்லை எனத் தெரிகிறது. இதனால், பயணியை கீழே இறங்குமாறு டிக்கெட் பரிசோதகர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இறங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் பயணியை கீழே இழுத்துத் தள்ளியுள்ளார். 

உடன் இருந்த மற்றோரு டிக்கெட் பரிசோதகரும் உடன் சேர்ந்து பயணியின் முகத்தில் உதைத்து கடுமையாக தாக்கினர். இதில் பயணி படுகாயமடைந்தார். 

இதனை அருகில் இருந்த மற்றொரு பயணி விடியோ எடுத்துள்ளார். அந்த விடியோவில் சக பயணிகள் அடிக்க வேண்டாம் என தடுத்தும், டிக்கெட் பரிசோதகர்கள் கடுமையாக டிக்கெட் இல்லாத பயணியின் முகத்தில் உதைக்கின்றனர். இந்த விடியோவுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரி, ரயில் பயணியிடம் கடுமையாக நடந்துகொண்ட டிக்கெட் பரிசோதகர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com