
கோப்புப் படம்.
உ.பி.,யில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு 'காதல் கடிதம்' எழுதிய ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பல்லார்பூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவபர் ஹரிஓம் சிங். இவர் கடந்த டிசம்பவர் மாதம் 30ஆம் தேதி 8ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு வாழ்த்து அட்டை கொடுத்துள்ளார். வீட்டிற்கு சென்றதும் வாழ்த்து அட்டையை பிரித்துப் பார்த்த மாணவி அதிர்ச்சி அடைத்துள்ளார்.
அதில் ஆசிரியர் கைப்பட 12 வரிகளில் எழுதிய காதல் கடிதம் ஒன்று இருந்துள்ளது.
உடனே இதுகுறித்து மாணவியின் தந்தைக்கு தெரிய வர ஆசிரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில், ஆசிரியர் ஹரிஓம் சிங் மீது வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) குன்வார் அனுபம் சிங் தெரிவித்தார்.
இதையும் படிக்க- வாரிசு படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு?: வெளியானது சென்சார் சான்றிதழ்
இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததால், ஆசிரியர் மீது மாவட்ட கல்வி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி கவுஸ்துப் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் விபின்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.