ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவர் கைது!

ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவரை தில்லி காவல்துறையினர் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
சங்கர் மிஸ்ரா
சங்கர் மிஸ்ரா
Published on
Updated on
1 min read

ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவரை தில்லி காவல்துறையினர் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

நவம்பர் 26ஆம் தேதி நியூ யார்க் - தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது மது சங்கர் மிஸ்ரா என்பவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியது. 

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து 11 நாள்களுக்குள் டிசம்பர் 6ஆம் தேதி தில்லி - பாரீஸ் சென்ற மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலும் மது அருந்திய நபர் ஒருவர் பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார். 

இந்த இரு சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்த பிறகு சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

தில்லி - பாரீஸ் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால், நியூ யார்க் - தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த நபருக்கு 30 நாள்கள் விமானத்தில் பறப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தவரை கைது செய்யாதது குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தில்லி காவல் துறை, விமான போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியாவுக்கு தில்லி மகளிர் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே வெளிநாட்டுக்கு சங்கர் மிஸ்ரா தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்த சங்கர் மிஸ்ராவை நேற்றிரவு கைது செய்த காவல்துறையினர் தில்லி அழைத்து வந்துள்ள நிலையில் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com