அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா: முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்தார்

அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா: முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்தார். 
அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா: முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்தார்

அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடி திருவிழாவை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா இன்று முதல் ஜனவர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போ குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விழாவில் பேசிய முதல்வர் பூபேந்திர படேல், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகவும், இந்தியா உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்றும் கூறினார். 

சர்வதேச காத்தாடி திருவிழா G20 என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ளது. எனவே சர்வதேச காத்தாடி திருவிழாவின் தொடக்க விழாவிற்கு G20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

கரோனா தொற்று காரணமாக குஜராத்தில் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இடைவெளிக்குப் பிறகு இந்த காத்தாடி திருவிழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com