சிவாஜி பிரச்னையைத் தவிர அனைத்துப் பிரச்னைகளையும் மத்திய அமைச்சர்கள் பேசுகிறார்கள்: சஞ்சய் ரௌத்

சிவாஜி பிரச்னையைத் தவிர மற்ற அனைத்து பிரச்னைகளையும் மத்திய அமைச்சர்கள் பேசுகிறார்கள் என்று சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
சிவாஜி பிரச்னையைத் தவிர அனைத்துப் பிரச்னைகளையும் மத்திய அமைச்சர்கள் பேசுகிறார்கள்: சஞ்சய் ரௌத்

சிவாஜி பிரச்னையைத் தவிர மற்ற அனைத்து பிரச்னைகளையும் மத்திய அமைச்சர்கள் பேசுகிறார்கள் என்று சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

அவுரங்கபாத்தில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சத்ரபதி சிவாஜியை பழைய லட்சிய மனிதர் என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதுகுறித்து சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், மத்திய அமைச்சர்கள் அனைத்துப் பிரச்னைகளையும் பற்றி பேசுகிறார்கள். ஆனால் சத்ரபதி சிவாஜியை அவமதித்ததைப் பற்றி அமைதியாக இருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சுயமரியாதை மனிதராவது அதை எழுப்புவார் என்று நான் நினைத்தேன். 

சிவசேனை ஒன்றுதான். சிவசேனையை பாலாசாகேப் தாக்கரே நிறுவினார். உத்தவ் தாக்கரே தலைமையில் ராணுவம் உள்ளது என்றார். மேலும் சிவசேனையின் சின்னம் சர்ச்சை குறித்து பேசிய சஞ்சய், நீதிமன்றத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், மகாராஷ்டிரத்தில் மத்திய அரசு உருவாக்கிய சர்ச்சை முறியடிக்கப்படும் என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com