அடா் பனி மூட்டம்: தில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அடர் பனி மூட்டம் காரணமாக தில்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
அடர் பனிமூட்டத்தின் காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்.
அடர் பனிமூட்டத்தின் காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்.


புதுதில்லி: அடர் பனி மூட்டம் காரணமாக தில்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

புத்தாண்டுக்கு பிறகு வட மாநிலங்களில் அடர் மூடுபனி மற்றும் குளிர் அலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை, விமான சேவை, ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

வடமேற்கு இந்தியாவையும் அதை ஒட்டிய மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளையும் அடா்ந்த மூடுபனி சூழ்ந்ததால், சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து இயக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தில்லி உள்பட வட இந்தியாவின் சில பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்திருந்தது. அடா்த்தியான மூடுபனி, குளிா் நாள் மற்றும் குளிா் அலை நிலைமைகள் தொடரும் என்றும் எச்சரித்துள்ளது.

இருப்பினும், மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக ஓரிரு நாள்களுக்குப் பிறகு சிறிது நிவாரணம் கிடைக்கும் என்று ஐஎம்டி தெரிவித்திருந்தது.

பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு சிவப்பு எச்தசரிக்கையும், பிகார் மற்றும் ராஜஸ்தானுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தில்லியின் உச்ச குளிா்கால மின் தேவை கடந்த வெள்ளிக்கிழமை 5,526 மெகாவாட்டாக உயா்ந்தது. சில இடங்களில் விவசாயம், கால்நடைகள், நீா் வழங்கல், போக்குவரத்து மற்றும் மின்துறை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை (ஜனவரி 9) தலைநகரில் ‘குளிா் அலை’ இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை முதல் (ஜனவரி 10) இரவு முதல் வட மாநிலங்களில் அடர் பனி மூட்டம் மற்றும் குளிர் அலைகள் அனைத்தும் குறையும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com