தில்லியை சூழ்ந்த பனிமூட்டம்: 40 விமானங்கள், ரயில்கள்  தாமதம்

தில்லியை சூழ்ந்துகொண்ட கடும் பனிமூட்டம் காரணமாக தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 40 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
தில்லியை சூழ்ந்த பனிமூட்டம்: 40 விமானங்கள், ரயில்கள்  தாமதம்
தில்லியை சூழ்ந்த பனிமூட்டம்: 40 விமானங்கள், ரயில்கள்  தாமதம்


புது தில்லி: தில்லியை சூழ்ந்துகொண்ட கடும் பனிமூட்டம் காரணமாக தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 40 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இன்று காலை 7 மணி வரை, தில்லி விமான நிலையத்துக்கு வந்து சேர வேண்டிய எந்த விமானமும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோல, ஏராளமான உள்ளூர் விமானங்கள், அதிகாலை முதல் புறப்படாமல், புறப்படுவதற்கு வரிசைகட்டி நிற்கின்றன. அதுபோல, இதுவரை தில்லி விமான நிலையத்துக்கு வர வேண்டிய 18 விமானங்கள் தாமதமாக வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

வட இந்தியா முழுவதும் கடுமையான பனிமூட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜஃப்தர்ஜங் பகுதியில் 6.4 டிகிரி செல்சியஸ், பாலம் பகுதியில் 7.5 டிகிரி செல்சியஸாக குளிர்நிலை பதிவாகியிருக்கிறது.

இதுபோல, தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. பல விரைவு ரயில்கள் 4 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com