
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ரோந்துப் பணி மற்றும் ராணுவப் படைகள் நிலைநிறுத்துவது பலப்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த பிஎஸ்எஃப் அதிகாரி தெரிவித்தார்.
பாரத தர்ஷன் சுற்றுப்பயணத்தை கொடியசைத்துத் தொடங்கிவைக்கும் நிகழ்வில் காஷ்மீரின் ஆய்வாளர் அசோக் யாதவ் உரையாற்றினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
எல்லைப் பகுதியில் பயங்கரவாத அமைப்புகள் எப்போதும் வன்முறையை நடத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால், ராணுவ வீரர்கள் அதை தடுத்துநிறுத்தும் வகையில் அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
படிக்க: தம்பதியருக்குள் ஏற்படும் பிரிவினையை, திருமணப் பொருத்தம் கூறுமா?
பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் முக்கியமாக குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் எல்லையில் பாதுகாப்புப் பணிகளை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் சமீபத்தில் நடந்ததைப் போன்று ஏதேனும் பயங்கரவாதச் சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, தனக்கு அப்படி எதுவும் தெரியாது என்று அவர் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...