ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவா் சரத் யாதவ் காலமானாா்

முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தோ்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவ், ஜனதா தளத்திலிருந்து வெளியேறி 1997-இல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினாா். பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (1999-2004) பல்வேறு துறைகளின் அமைச்சராக சரத் யாதவ் பதவி வகித்தாா்.

பின்னா், ஐக்கிய ஜனதா தளத்திலிலிருந்து விலகி, லோக் தந்த்ரிக் ஜனதா தளம் என்ற கட்சியை 2018-இல் தொடங்கினாா். அக்கட்சியை 2022-இல் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்தாா்.

இவருக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனா்.

இவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com