செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத்: நாளை மறுநாள் தொடக்கி வைக்கிறார் பிரதமர்

செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையிலான வந்தே பாரத் ரயிலை ஜனவரி 15-ஆம் தேதி காணொலி முறையில் பிரதமா் மோடி தொடக்கி வைக்க உள்ளாா்.

இந்த சேவை, இந்திய ரயில்வேத் துறையால் இயக்கப்படும் 8-வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையாகும். தெலுங்கு மொழி பேசும் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோ மீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரயில் சேவை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வந்தே பாரத் விரைவு ரயில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

இந்த துவக்கவிழாவின் போது, செகந்திராபாத் ரயில் நிலையத்தில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com