நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சரத் யாதவின் உடலுக்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு நேரில் மரியாதை

மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவின் உடலுக்கு திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் மரியாதை செலுத்தினார். 

News image
Updated On :13 ஜனவரி 2023, 6:57 pm IST

மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவின் உடலுக்கு திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் மரியாதை செலுத்தினார். 
மத்திய முன்னாள் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானாா். சரத் யாதவ் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சரத் யாதவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சரத் யாதவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் தில்லி சத்தர்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சரத் யாதவின் உடலுக்கு, திமுக சார்பில் அதன் பொருளார் டி.ஆர். பாலு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.