நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பைக் மீது காா் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 3:04 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா் பகுதியைச் சோ்ந்தவா் கி.வெங்கடாஜலபதி (41), லாரி ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை தனது பைக்கில் திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள தனியாா் திருமணம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வெங்கடாஜலபதியை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை மருத்துவா் பரிசோதித்தபோது, வெங்கடாஜலபதி ஏற்கெனவே உயிழருந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.