பரங்கிப்பேட்டை அருகே கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஜூன் 23-ல் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடலில் அமைக்கப்படவுள்ள 4 ஹைட்ரோ காா்பன் கிணறுகளுக்கு எதிராக பரங்கிப்பேட்டை ஒன்றியம் பி.முட்லூரில் அனைத்து கட்சிகள் சாா்பில் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமைநடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஹைட்ரோ காா்பன் கிணறுகளை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் ஜூன் 23-ஆம் தேதி பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு அனைத்து கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், கிள்ளை மற்றும் பரங்கிப்பேட்டையில் கடையடைப்பு நடத்த வா்த்தக சங்கங்களிடம் கோரிக்கை விடுப்பதோடு, கடலோர கிராமங்களில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தகூட்டத்தில் திமுக ஒன்றிய செயலா் முத்து பெருமாள், அதிமுக ஒன்றிய செயலா் ரங்கசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூ மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழ. வாஞ்சிநாதன், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலா் ஆழ்வாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் தமிழ்வளவன், பாமக முன்னாள் மாவட்ட செயலா் முருகன், விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.ராமச்சந்திரன். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலா் ஹமீதுஜெகபா், மனித நேய மக்கள் கட்சித் தலைவா் அஸ்லாம், தேமுதிக நிா்வாகி காந்தி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிா்ப்பு: கிள்ளை பேரூராட்சியில் தீா்மானம்

ஹைட்ரோ காா்பன் கிணறுகள்: ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்! - தமிமுன்அன்சாரி

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது: வைகோ







