10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர்: குவியும் பாராட்டு

10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர்: குவியும் பாராட்டு

திரிபுரா மாநில முதல்வரும், மருத்துவருமான மாணிக் சஹா, பத்து வயது சிறுவனின் வாய்க்குள் இருந்த நீர்க்கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக  செய்துள்ளார்.
Published on

திரிபுரா மாநில முதல்வரும், மருத்துவருமான மாணிக் சஹா, பத்து வயது சிறுவனின் வாய்க்குள் இருந்த நீர்க்கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக  செய்துள்ளார். முதல்வருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

திரிபுரா முதல்வர் மருத்துவர் மாணிக் சஹா, முதல்வராக பதவியேற்று ஏற்று ஏழு மாதங்களே ஆன நிலையில், புதன்கிழமை திரிபுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காலை 9 மணிக்கு வந்தவருக்கு முன்னாள் சக பணியாளர்களிடம் இருந்து உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழு உதவியுடன் பத்து வயது சிறுவனின் வாய்க்குள் இருந்த நீர்க்கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துவிட்டு காலை 9.30 மணியளவில் முகத்தில் புன்னகையுடன் அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து வெளியே வந்தார்.  

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நோயாளிக்கு உதவுவதற்காக, "இன்று காலை நான் எந்த நிர்வாக அல்லது அரசியல் பணிகளிலும் ஈடுபடாமல், அறுவை சிகிச்சை அரங்குக்கு வந்தேன். அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுவன் நலமாக உள்ளான். 

"இது மிகவும் ஆறுதல் அளிக்கிறது. நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த இடம் இது. பல மாத இடைவெளிளுக்குப் பிறகு நான் அறுவை சிகிச்சை செய்தேன், ஆனால் எந்த சிரமமும் இல்லை," என்று அவர் கூறினார். முதல்வருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

டாக்டர் சாஹா, மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, திரிபுரா மருத்துவக் கல்லூரியில் வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் துறையின் தலைவர் மற்றும் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் நான் மருத்துவர், பிறகுதான் முதல்வர் என சஹாவின் இந்த செயல், தான் கற்றுக்கொண்டது பிறருக்கு உதவும் எனில், வாழ்வின் எந்த நிலைக்கு சென்றாலும் அதை மீண்டும் செய்வதில் தயக்கம் வேண்டாம் என்பதை பலருக்கும் உணர்த்தும் வகையில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com