கொள்ளைக் கும்பலிடமிருந்து காப்பாற்றிய 'ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம்'

தள்ளுபடி விலையில் கிடைக்கிறதே என்று ஆன்லைனில் ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டத்தை வாங்கிய தொழிலதிபரின் குடும்பத்தை, மிகப்பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்றியிருப்பது அவர்களுக்கே ஆச்சரியத்தை அளித்திருக்கும்.
கொள்ளைக் கும்பலிடமிருந்து காப்பாற்றிய 'ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம்'

பெங்களூரு: தள்ளுபடி விலையில் கிடைக்கிறதே என்று ஆன்லைனில் ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டத்தை வாங்கிய தொழிலதிபரின் குடும்பத்தை, மிகப்பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்றியிருப்பது அவர்களுக்கே ஆச்சரியத்தை அளித்திருக்கும்.

கொடூர ஆயுதங்களுடன் நுழைந்த ஏழு பேர் கொண்ட கொள்ளைக் கும்பலிடமிருந்து தப்பித்ததோடு, குடும்பத்தில் இருந்த யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படாமல் தப்பித்திருக்கிறார்கள்.

பெங்களூருவின் தலகட்டபுரா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய் (59). இவரது இரண்டு மகன்களில் ஒருவர் ராகுல். இவர் ஆன்லைனில் ஸ்மார்ட் செக்யூரிடி சிஸ்டத்தை வாங்கிப் பொருத்தியிருந்தார்.

இந்த நிலையில்தான், புதன்கிழமை இவர்களது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பலிடமிருந்து இவர்கள் தப்பியுள்ளனர். இது குறித்து ராகுல் கூறுகையில், கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்தது முதல் அவர்கள் எந்ததெந்த அறைகளுக்குள் நுழைகிறார்கள் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டே வந்ததால், எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து முடிவு செய்ய முடிந்தது என்கிறார்.

காலையில், தேநீர் போட்டுக் கொண்டிருக்கும் போது, வீட்டுக்குள் சிலர் நுழைந்து விட்டதை அறிந்தேன். செல்லிடப்பேசியில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு உடனடியாக சமையலறையிலிருந்தே தந்தைக்கு தகவல் சொன்னேன். பிறகு அருகில் இருக்கும் பாதுகாவலர்களை வரவழைத்தேன். அவசரத் தொடர்புக்கும் தகவல் தெரிவித்தேன்.

ராகுலும், அவரது தந்தை அஜய்யும் சேர்ந்து கொள்ளைக் கும்பலை எதிர்கொண்டனர். 12 நிமிடங்களுக்குள் காவல்துறையினர் வீட்டுக்கு வந்துவிட்டனர். கையிலிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் இவர்கள் கொள்ளைக் கும்பலிடமிருந்து தப்பித்து வெளியே வந்துள்ளனர்.

கொள்ளைக் கும்பலை அச்சுறுத்த துப்பாக்கியால் சில தோட்டாக்களை சுட்டுள்ளார். அது மட்டுமல்ல, வீட்டுக்குள் இருக்கும் அனைத்து விளக்குகளையும், ராகுல் கையிலிருந்த கைப்பேசி செயலி மூலமாகவே ஆன் செய்து, கொள்ளைக் கும்பலை காவல்துறையினர் கைது செய்ய வசதி செய்து கொடுத்துள்ளார்.

சுமார் 45 நிமிட போராட்டத்துக்குப் பிறகு கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது  செய்யப்பட்டனர். இரண்டு பேர் தப்பிச் சென்ற நிலையில், அன்று மாலையே அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com