2023-ல் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் எவை?

2023ஆம் ஆண்டில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் எவை என்பது குறித்த பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
2023-ல் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் எவை?

2023ஆம் ஆண்டில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் எவை என்பது குறித்த பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

பயணப் பிரியர்களுக்கு எந்த இடத்திற்கு சென்றாலும் அது நிறைவைத் தரும். ஆனால் சாமானியர்களுக்கோ அல்லது பட்ஜெட் சுற்றுலாவாசிகளுக்கோ எந்தெந்த இடங்கள் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள் என்பது பற்றிய தகவல்கள் முன்கூட்டியே தெரிந்தால், அது மிகுந்த பயனை அளிப்பவையாக இருக்கும். 

அந்தவகையில் நியூயார்க் டைம்ஸ் இதழ் ஆய்வு மேற்கொண்டு 2023ஆம் ஆண்டில் சென்று அனுபத்து பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 52 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த சர்வதேச சுற்றுலா நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் கேரள மாநிலம் மட்டும் இடம் பெற்றுள்ளது. கடவுளின் நகரம் எனப் பெயர்பெற்ற கேரளம், 2023ஆம் ஆண்டில் சென்றுவர வேண்டிய சர்வதேச சுற்றுலா இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

அலப்பி படகு சவாரி
அலப்பி படகு சவாரி

கேரளத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் இயற்கை எழில் மிகுந்த இடங்கள் பல உள்ளன. குறிப்பாக அலப்பி பகுதி, வெனிஸ் நகரத்தைப் போன்றது என நியார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. 

அலப்பி முகத்துவாரப் பகுதியில் படகில் செல்வது மிகுந்த ரம்மியமான காட்சியாக இருக்கும். அதுமட்டுமின்றி கேரளத்திலுள்ள பாரம்பரியம் மிக்க கோயில்கள், கலாசார உணவு வகைகளும் சுற்றுலா பயணிகளைக் கவரும் காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

சுற்றுலா பயணிகளுக்கு வளைந்த தென்னை மரங்களில் ஊஞ்சல், பனை மரமேறுதல், நீர் சறுக்கு, படகுப்போட்டி போன்ற விளையாட்டுகளும் நடத்தப்படுவதால், சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின் சர்வதேச பட்டியலில் கேரளம் இடம்பெற்றுள்ளது. 

அதனைத் தொடர்ந்து ஜப்பானின் மொரியோகா, ஸ்காட்லாந்தின் கில்மார்டின் க்லென், நியூசிலாந்தின் ஆக்லாந்து, கலிஃபோர்னியாவின் பால்ம் ஸ்பிரிங், ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவு, அல்பேனியாவின் ஜோசா நதி, நார்வேயின் ட்ரோம்சோ ஆகிய பகுதிகள் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com