

கரோனா காலகட்டத்தின்போது பத்திரிகையாளர்கள் கர்மயோகிகள் போல் செயல்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய வாராந்திர பத்திரிகையான ‘பஞ்சன்யா’-வின் 75 வது ஆண்டு விழா தில்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாட்டினார்.
அப்போது, ‘நாட்டில் ஆசிரியர்களுக்கு இணையான மதிப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. நேர்மை, உண்மை ஆகியவற்றை பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டும். போட்டிக்காக தவறான செய்திகளை வெளியிடக் கூடாது. ஊடகங்கள் அரசை விமர்சிக்கக் கூடாது என சொல்லவில்லை. ஆனால், விமர்சிக்க வேண்டும் என்பதற்காகவே விமர்சிப்பது சரியல்ல. நாட்டில் ஊடகங்களின் பணி முக்கியமானது. கரோனா காலகட்டத்தில் பத்திரிகையாளர்கள் கர்மயோகிகள்போல் செயல்பட்டனர். ஊடகத்துறை நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான தூண்.’ எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.