கடுங்குளிர்: ஜனவரி 18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் கடுங்குளிர் காரணமாக, உதைப்பூர் மற்றும் பிகானீர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கடுங்குளிர்: ஜனவரி 18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

உதைப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் கடுங்குளிர் காரணமாக, உதைப்பூர் மற்றும் பிகானீர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

உதைப்பூர் நகரின் கூடுதல் ஆட்சியர் பிரபா கௌதம், விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்தார்.

அவர் பிறப்பித்த உத்தரவில், ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் கடுங்குளிர் காரணமாக, மாணவ, மாணவிகளின் நலன் கருதி ஜனவரி 16 முதல் 18 வரை எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார்.

பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இது குறித்து மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியிருக்கிறார்.

இதுபோல, பிகாநீர் மாவட்ட நிர்வாகமும், ஜனவரி 18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுளள்து.

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர்நிலை மிகவும் குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பல இடங்களில் உறைபனி அளவுக்கு வெப்பநிலை குறைந்தது. ஃபேதஹ்பூர் - ஷெகாவத் பகுகிளில் மைனஸ் 4.7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியிலும் ஜனவரி 17 வரை விடுமுறை விடப்பட்டுளள்து. மீரட்டிலும் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com