

புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்தீப் செங்கர், தனது மகளின் திருமணத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குல்தீப் செங்கர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். அவரது மகளின் திருமணத்தில் பங்கேற்க இடைக்கால பிணை வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க.. பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய இளைஞர் பலி
ஜனவரி 27 முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை இடைக்கால பிணை வழங்கிய நீதிபதிகள், தினமும் கையெழுத்து போடவும், தலா ரூ.1 லட்சத்துக்கு இரண்டு பேர் பிணைக் கையெழுத்து போடவும் உத்தரவிட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆயுள் முடியும் வரை அவர் சிறையில் இருக்கவும், ரூ.25 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.