
நாட்டில் விளையாட்டுத் துறை புதிய சாதனைகளை புரிய விளையாட்டு வீரர்கள் இப்போதே புதிய இலக்குகளைத் தேட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாட்டின் சர்வதேசப் போட்டிகளில் விளையாட்டு வீரர்களின் சாதனைகளைப் பாராட்டிய பிரதமர், சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவது ஆரம்பம் மட்டுமே என்றும், விளையாட்டுத் துறையில் இந்தியா நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சன்சாத் கேல் மஹாகும்ப் 2022-23 இன் இரண்டாம் கட்டத்தை கானொலி காட்சி மூலம் தொடக்கி வைக்கும் போது பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பல்வேறு போட்டிகளில் இந்தியாவின் செயல்திறன் விவாதப் பொருளாகி வருகிறது. இது ஆரம்பம் மட்டுமே. நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். புதிய இலக்குகளை அடைய வேண்டும்.
கேல் மஹாகும்ப் அமைப்பைப் பாராட்டிய பிரதமர், உள்ளூர் இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் காத்திருப்பதாக கூறினார்.
இதையும் படிக்க: சமுத்திரகனியின் ‘தலைக்கூத்தல்’ டீசர் வெளியீடு
மேலும், கடந்த 8-9 ஆண்டுகளில், விளையாட்டுக்கான சிறந்த சூழலை நாடு உருவாக்கியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.