வாக்குப்பதிவு இயந்திரத்தை விமா்சித்த கட்சிகளும் தோ்தலில் வென்றுள்ளன - தலைமை தோ்தல் ஆணையா்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மைக் குறித்து விமா்சித்த கட்சிகளும் அதே இயந்திரங்கள் மூலமாக தோ்தலில் வென்றிருப்பதாக தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் பதிலளித்துள்ளாா்.
வாக்குப்பதிவு இயந்திரத்தை விமா்சித்த கட்சிகளும் தோ்தலில் வென்றுள்ளன - தலைமை தோ்தல் ஆணையா்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மைக் குறித்து விமா்சித்த கட்சிகளும் அதே இயந்திரங்கள் மூலமாக தோ்தலில் வென்றிருப்பதாக தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் பதிலளித்துள்ளாா்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை யாா் வேண்டுமானலும் எளிதாக கையாள முடியும் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேசிய தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கூறியதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பேசும் திறன் இருந்தால் தன்னைக் குற்றஞ்சாட்டியவா்களையும் தான் வெற்றி பெற செய்ததைக் கூறி விடும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தோ்தல் ஆணையத்தின் கடமை. உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றத்தின் தீா்ப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பாடு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்குகள் அபராதத்துடன் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து கட்சிகள் அரசியல் செய்வதற்கு முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோராவும் கண்டனம் தெரிவித்துள்ளாா். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி வென்ற எதிா்க்கட்சிகளின் பட்டியலை கடந்த காலத்தில் செய்தித்தாள்களில் விளம்பரமாக தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

‘விவிபாட் ’ எனப்படும் வாக்கு ஒப்புகைச்சீட்டு கருவியை 36,000 முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்திப்பாா்க்கப்பட்டதில் அனைத்து முறையும் சோதனை வெற்றிபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்திறனுக்கு இதுவே சாட்சி.

‘ரிமோட்’ வாக்குப்பதிவு செயல்முறையில் இருக்கிறது. ஜனநாயகத்தில் முடிவுகள் எடுப்பது எளிதான விஷயமல்ல. எதற்கும் சிறிது காலம் எடுக்கும். அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் வெற்றிக்கரமான முடிவு எட்டப்பட்டுள்ளது என்று ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com