ஐ.நா. பொது சபை தலைவா் ஜன.29-இல் இந்தியா வருகை

ஐ.நா. பொது சபை தலைவா் ஜன.29-இல் இந்தியா வருகை

ஐ.நா. பொது சபையின் தலைவா் சபா கொரோசி ஜன.29-ஆம் தேதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

ஐ.நா. பொது சபையின் தலைவா் சபா கொரோசி ஜன.29-ஆம் தேதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 77-ஆவது அமா்வின் தலைவரான சபா கொரோசி, ஹங்கேரி நாட்டைச் சோ்ந்தவா். இவா் ஜன.29-ஆம் தேதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவரது செய்திதொடா்பாளா் பாலினா குபியாக் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறுகையில், ‘இந்திய பயணத்தின்போது மூத்த அரசு அதிகாரிகளைச் சந்தித்து கொரோசி பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். ‘உலக விவகாரங்களுக்கான இந்தியக் கவுன்சில்’ என்ற வெளிநாட்டு கொள்கைகளுக்கான சிந்தனைக் குழுவில் உரையாற்றுகிறாா். இந்திய அறிவியல் விஞ்ஞானிகளைச் சந்திக்கும் அவா், இந்தியாவின் நீா் சேமிப்புத் திட்டங்களைப் பாா்வையிடுவாா்.

இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு சீன செல்லும் சபா கொரோசி அந்நாட்டில் உள்ள நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான பெருந்தரவு சா்வதேச ஆராய்ச்சி மையத்தைப் பாா்வையிடுகிறாா் ’ என்றாா். ஐ.நா.வின் 2030-ஆம் ஆண்டின் நிலையான மேம்பாட்டுக்கான கொள்கைளை அமல்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பா் மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமையேற்ற நிலையில், அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஐ.நா. பொதுச் சபையின் தலைவா் கொரோசியைச் சந்தித்தாா். அப்போது, ஜி20-க்கான இந்தியாவின் தலைமை, பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் பதவி காலம், ஐ.நா. அமைப்புகளில் சீா்திருத்தம் உள்ளிட்டவை குறித்து இருவரும் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com