கொட்டும் மழையில் ஜம்மு-காஷ்மீரில் நடைப்பயணத்தைத் தொடர்ந்த ராகுல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஹிமாச்சலில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் எல்லைக்குள் இன்று நுழைந்துள்ளது. 
கொட்டும் மழையில் ஜம்மு-காஷ்மீரில் நடைப்பயணத்தைத் தொடர்ந்த ராகுல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஹிமாச்சலில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் எல்லைக்குள் இன்று நுழைந்துள்ளது. 

வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா, ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து இன்று ஜம்மு-காஷ்மீருக்கு நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். 

கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல், முதன்முறையாக மழைக்கவசமான ரெயின்கோர்டை அணிந்து ராகுல் காந்தி தனது பயணத்தை ஜம்மு-காஷ்மீரில் எல்லை மாவட்டத்தில் உள்ள ஹட்லி மோரில் இருந்து தொடங்கினார். இந்த பயணத்தில் சிவசேனா உள்பட பல முக்கிய தலைவர்களுடன், சஞ்சய் ராவத்தும் இணைந்துள்ளனர். 

நடைப்பயணம் இன்று காலை 7 மணிக்கு தொடங்க திட்டமிட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக தொடங்கியது. 

ஒற்றுமை நடைப்பயணத்தின் இறுதிக்கட்டத்தில் காந்தியுடன் கட்சியின் ஜம்மு-காஷ்மீர் பிரிவுத் தலைவர் விகார் ரசூல் வாணி மற்றும் அவரது முன்னோடி ஜி.ஏ மிர் உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் உடன் சென்றனர். 

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், 

எனது கட்சி சார்பில் யாத்திரையில் சேர வந்துள்ளேன். நாட்டின் சூழல் வேகமாக மாறிவருகிறது. உண்மையான பிரச்னைகளில் குரல் எழுப்பும் தலைவராக காந்தியை நான் பார்க்கிறேன்.
இந்த பயணம் மக்கள் இணைந்திருக்கும் வகையில் மனதைக் கவரும். அவர் ஒரு நல்ல தலைவர், அதனால்தான் அவர் சாலையில் இருக்கிறார். மக்கள் (தங்கள் தலைவர் யார் என்பதை) தேர்ந்தெடுப்பார்கள்.

வியாழன் அன்று லக்கன்பூர் வழியாக ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்த இந்த அணிவகுப்பு, தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு கொடி ஒப்படைப்பு விழாவைத் தொடர்ந்து இரவு அங்கேயே நிறுத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல் காந்தி தனது ஆதரவாளர்களுடன் தனது பயணத்தைத் தொடங்கியதால், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் அடங்கிய பலத்த பாதுகாப்பு வளையம் காந்தியைச் சுற்றி அமைக்கப்பட்டது. கதுவா மாவட்டத்தில் உள்ள சட்வாலியில் இந்த பயணம் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com