
ஜம்முவின் நார்வல் பகுதியில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
ஜம்மு நகரின் நார்வல் பகுதியில் சனிக்கிழமை காலை நேரிட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 9 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. கோயிலைப் போன்ற தோற்றத்தில் உருவாகிறது ராமேஸ்வரம் ரயில் நிலையம் - புகைப்படங்கள்
இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் நடந்த இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்பகுதி காவல்துறையினரால் சுற்றிவளைக்ப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...