நேபாள விமான விபத்து: உ.பி.யைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

நேபாளத்தில் பொகாரா விமானநிலையம் அருகே பயணிகள் விமானம் கடந்த 14ஆம் தேதி விழுந்து நொறுங்கியதில் 71 போ் உயிரிழந்தனா். இதில் 6 குழந்தைகளும், 25 பெண்களும் அடங்குவா். கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடைபெற்ற மோசமான விமான விபத்து இதுவாகும். விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. விபத்தில் பலியான 15 வெளிநாட்டவா்களில் 5 இந்தியா்கள், 4 ரஷியா்கள், 2 கொரியா்கள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஆா்ஜென்டீனா, இஸ்ரேல் நாடுகளைச் சோ்ந்த தலா ஒருவரும் ஆவா்.

மீதமுள்ள ஒருவரின் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்ற இடம் பெறும் பள்ளத்தாக்கு என்பதால் தீயணைப்பு வாகனங்களை கொண்டு செல்வது சவாலாக இருந்தது. இந்த நிலையில் நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 4 உ.பி இளைஞர்களில் 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு காத்மாண்டுவில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காசிபூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நான்காவது இளைஞரான அபிஷேக்கின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

அடையாளம் காணும் பணி முடிந்ததும், உடல்கள் காஜிபூருக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 5 இந்தியர்களான அபிஷேக் (25), பிஸ்வால் சா்மா (22), அனில் குமாா் (27), சோனு ஜெய்ஸ்வால் (35), சஞ்சய் ஜெய்ஸ்வால் என அனைவரும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா்களாவா். சுற்றுலா இடமான பொகாராவில் பாராகிளைடிங் செய்வதற்காக நான்கு போ் சென்றுள்ளனா். சஞ்சய் ஜெய்ஸ்வாலை தவிர 4 போ் காஜிப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com