குடிபோதையில்.. பெங்களூருவிலிருந்து பிரியாணி ஆர்டர் செய்த மும்பைப் பெண்

மும்பை வாழ்ந்து வரும் பெண் ஒருவர், குடிபோதையில் தவறுதலாக, பெங்களூருவிலிருந்து பிரியாணி ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குடிபோதையில்.. பெங்களூருவிலிருந்து பிரியாணி ஆர்டர் செய்த மும்பைப் பெண்
குடிபோதையில்.. பெங்களூருவிலிருந்து பிரியாணி ஆர்டர் செய்த மும்பைப் பெண்

மும்பை வாழ்ந்து வரும் பெண் ஒருவர், குடிபோதையில் தவறுதலாக, பெங்களூருவிலிருந்து பிரியாணி ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய மக்களின் ருசி என்பது அலாதியானது. காரம், புளிப்பு, இனிப்பு என எண்ணற்ற ருசிகளில் ஏராளமான உணவு வகைகள் உள்ளன. ஆனால் என்ன, பிரியாணி என்ற ஒற்றைச் சொல், ஒட்டுமொத்த அசைவ மக்களின் நாவையும் அடிமையாக்கி வைத்திருக்கிறது.

இது பரவலாக தெரியப்பட்டாலும் கூட, ஆன்லைன் மூலம் உணவு வாங்கிச் சாப்பிடும் கலாசாரம் வந்த பிறகு, அது புள்ளிவிவரமாகவே அவ்வப்போது வெளியாகி வருகிறது.

உணவு டெலிவரி செய்யும் சோமாட்டோ, கடந்த 2022ஆம் ஆண்டும், அதற்கு முன்பும் கூட,  அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி இருந்ததாகத் தெரிவித்துள்ளது. போதும், பிரியாணியின் புகழ் பாடியதற்கு. விஷயத்துக்கு வரலாம்.

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு, தனது செல்லிடப்பேசி வாயிலாக ஆர்டர் செய்ய முயன்றார். பிரியாணியை ஆர்டர் செய்துவிட்டார். ஆனால் என்ன? குடிபோதையில் இருந்ததால், மும்பையில் இருந்து கொண்டு, பெங்களூருவில் இருந்த மேகனா உணவகத்தில் அவர் பிரியாணி ஆர்டர் செய்யவும், ஆச்சரியப்படும் வகையில் அந்த ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. என்ன.. அந்த பிரியாணியின் விலை வெறும் ஜஸ்ட்... ரூ.2500 மட்டும்தான். பிறகு பெங்களூருவிலிருந்து வர  வேண்டாமா?

2500 பில் வந்த பிறகுதான், அப்பெண், தான் செய்த தவறை உணர்ந்திருக்கிறார். உடனடியாக அதனை ஒரு ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். ஜனவரி 21ஆம் தேதி பகிரப்பட்ட இந்தப் பதிவை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். அது மட்டுமா தங்களது கருத்துகளையும் மாநில பேதம் பார்க்காமல் பகிர்ந்துள்ளனர்.

அந்த ஆர்டர் எடுக்கப்பட்டதுடன், சுபி, உங்களது வீட்டு வாசலில் பிரியாணி கிடைத்ததும் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் சொமாட்டோ கூறியிருந்ததுதான் அல்டிமேட்.

பிறகு அவர் ஆர்டர் செய்தபடியே பிரியாணி வந்து சேர்ந்தது. அதனையும் அவர் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com