முதல் முறையாக.. ஜேஇஇ தேர்வர்களில் 30 சதவீதம் மகளிர்

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வெழுத 8.6 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இது 2022ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விடவும் 6,000 குறைவாகும்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


புது தில்லி: நாளை தொடங்கவிருக்கும் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வெழுத 8.6 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இது 2022ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விடவும் 6,000 குறைவாகும்.

வழக்கம் போல ஜேஇஇ தேர்வில் மாணவர்களே அதிகளவில் விண்ணப்பித்திருக்கிறார்கள். அதாவது 6 லட்சம் பேர் (70 சதவீதம்) மாணவர்கள். முதல் முறையாக, 30 சதவீதத்துக்கும் மேல் மாணவிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இது கடந்த 2022ஆம் ஆண்டு 2.5 லட்சமாக இருந்து தற்போது 2.6 லட்சமாக உயர்ந்துள்ளது.

மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல்-தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு தகுதி பெறுவதற்கான ஜேஇஇ தோ்வு இரு கட்டங்களாக (முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) நடத்தப்படும்.

தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். மேலும், முதல்நிலைத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடிப்பவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இதில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். 

நாடு முழுவதும் 290 நகரங்களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் மட்டும் சிங்கப்பூர், துபை, மாஸ்கோ உள்ளிட்ட 18 நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.

12-ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் சலுகை
இந்த நுழைவுத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருப்பதும் அவசியமாகும்.

இந்த நிலையில், மாநில கல்வி வாரியங்களில் படித்து ஜேஇஇ முதன்மைத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் (350/500 மதிப்பெண்) பெறாத காரணத்தால் ஐஐடிக்களில் சேர முடியாமல் போகிறது. எனவே, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் நிபந்தனையை தளா்த்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய கல்வி அமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்று, மத்திய அமைச்சகம் மதிப்பெண் தளா்வு அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com