பசுஞ்சாணத்தால் கட்டிய வீடுகள் கதிர்வீச்சினால் பாதிக்காது: குஜராத் நீதிமன்ற நீதிபதி

"மாட்டுச் சாணத்தால் ஆன வீடுகள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்படாது என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு
குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு


வியாரா: குஜராத்தின் தபி மாவட்டத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, நாட்டில் பசுக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, "மாட்டுச் சாணத்தால் ஆன வீடுகள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்படாது என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பசுவின் சிறுநீர் பல தீராத நோய்களை குணப்படுத்தும் என்று தபி மாவட்ட அமர்வு நீதிபதி சமீர் வியாஸ் கடந்த ஆண்டு நவம்பரில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். சட்ட விதிளை மீறி குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பசு மற்றும் காளைகளை கடத்திச் சென்ற 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனை விவரம் அண்மையில் வெளியிடப்பட்டது.

நீதிபதி தனது உத்தரவில், மாடுகளை இறைச்சிக்காக கொல்வது குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, பசு ஒரு விலங்கு மட்டுமல்ல "நமது தாய்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பசுவின் இரத்தத் துளிகள் பூமியில் விழாத நாளில்தான், பூமியின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். பசு பாதுகாப்பு பற்றி பேசினாலும் அது முறைப்படி செயல்படுத்தப்படவில்லை. பசு வதை மற்றும் சட்டவிரோத பசு கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இது ஒரு நாகரீக சமுதாயத்திற்கு அவமானம்” என்றும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com