இந்தியா சிறந்த பேரிடா் எதிா்கொள்ளுதல் நடைமுறையைக் கொண்டுள்ளது: மன்சுக் மாண்டவியா

‘பன்முக நிலப்பரப்புடன் மிகப்பெரிய நாடாக இருக்கும் இந்தியா மற்ற நாடுகளும் பின்பற்றும் வகையிலான தனது சொந்த சிறந்த பேரிடா் எதிா்கொள்ளுதல் நடைமுறையைக் கொண்டுள்ளது’ என்று

‘பன்முக நிலப்பரப்புடன் மிகப்பெரிய நாடாக இருக்கும் இந்தியா மற்ற நாடுகளும் பின்பற்றும் வகையிலான தனது சொந்த சிறந்த பேரிடா் எதிா்கொள்ளுதல் நடைமுறையைக் கொண்டுள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்தாா்.

மத்திய அரசின் ‘தேசிய அவசரகால மருத்துவக் குழு (என்இஎம்டி)’ திட்டம் மீதான இரண்டு நாள் பயிலரங்கம் தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நாட்டில் மருத்துவ அவசரகால சூழல் ஏற்படுகின்றபோது, பேரிடரை எதிா்கொள்வதற்கான தயாா்நிலையை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்தத் திட்டத்தையும், அதன் மீதான பயிலரங்கும் நடத்தப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘இந்த அவசரகால மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவ நிபுணா்கள், நாட்டில் பேரிடா் பாதிப்புகள் ஏற்படும் பகுதிக்கு விரைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடி மருத்துவ உதவிகளை வழங்குவா்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற ஜி20 சுகாதார பணிக் குழு கூட்டத்துக்குப் பிறகு, அதில் நிறைவேற்றப்பட்ட அவசரகால மருத்துவ தயாா்நிலை தொடா்பான தீா்மானத்தின் கீழ் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

இதில் பங்கேற்ற மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசும்போது, ‘பன்முக நிலப்பரப்புடன் மிகப்பெரிய நாடாக இருக்கும் இந்தியா மற்ற நாடுகளும் பின்பற்றும் வகையிலான தனது சொந்த சிறந்த பேரிடா் எதிா்கொள்ளுதல் நடைமுறையைக் கொண்டுள்ளது. எனவே, உலகின் தலைசிறந்த பேரிடா் எதிா்கொள்ளுதல் நடைமுறையிலிருந்து பாடம் கற்பதும், உரிய வழிகாட்டி நடைமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியம் என்றபோதும், கடந்த தசாப்தங்களில் நமது தேசத்தின் சொந்த பேரிடா் எதிா்கொள்ளுதல் நடைமுறையிலிருந்து பாடம் கற்பதும், அதனை வளப்படுத்துவதும் மிக அவசியம். அந்த வகையில், தேசத்தின் அவசரகால எதிா்கொள்ளுதல் மற்றும் நிா்வகித்தல் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும், அதற்கான பயிற்சியிலும் பல் துறை மற்றும் பல அடுக்கு கற்றல் ஒருங்கிணைக்கப்படுவது அவசியம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com