‘பாய் பிரண்ட்’ இல்லாத மாணவிகள் கல்லூரிக்கு வர தடையா? தலைப்புச் செய்தியான போலியான சுற்றறிக்கை!

மாணவிகள் அனைவரும் கட்டாயம் ‘பாய் பிரண்ட்’ வைத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் பெயரில் கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்
‘பாய் பிரண்ட்’ இல்லாத மாணவிகள் கல்லூரிக்கு வர தடையா? தலைப்புச் செய்தியான போலியான சுற்றறிக்கை!

புவனேஸ்வர்: மாணவிகள் அனைவரும் கட்டாயம் ‘பாய் பிரண்ட்’ வைத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் பெயரில் கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள சுற்றறிக்கை தலைப்புச் செய்தியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் தனியார் எஸ்விஎம் என்ற தன்னாட்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தகவல் பலகையில் கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் சுற்றறிக்கை ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், “காதலர் நாளான பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு ஆண் நண்பராவது கட்டாயம் இருக்க வேண்டும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாணவிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

ஆண் நண்பர்கள் இல்லாமல் தனியாக வரும் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைய அனுமதியில்லை. அதுமட்டுமல்லாமல், மாணவிகள் தங்கள் ஆண் நண்பருடன் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை காட்ட வேண்டும்“ என்று அந்த அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள மிகவும் வினோதமான சுற்றறிக்கை சிறிது நேரத்தில் வைரலானது. 

அந்த சுற்றறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் அதில் கல்லூரி முதல்வரின் கையெழுத்தும் இடம் பெற்றிருந்தது முற்றிலும் திகைப்பையும் அதே நேரத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவ - மாணவிகள், சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வருக்கு தகவல் அளித்தனர்.

கல்லூரியின் முதல்வர், “தனது கையெழுத்தை யாரோ தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்றும் தனது போலியான கையெழுத்துடன் சுற்றறிக்கையை அறிவிப்பு பலகையில் ஒட்டியுள்ளனர்” என்றும் அவர் கூறினார். பின்னர் அந்த சுற்றறிக்கை போலியானது என நிரூபிக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோட்டீஸ் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com