
தில்லி குடியரசு நாள் விழா கொண்டாட்டத்தில் தமிழக வாகனம் வலம் வந்தது. தமிழகம் மட்டுமின்றி மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கேரளம் என அனைத்து மாநில வாகனங்களும் அணிவகுப்பில் இடம் பெற்றன.
குடியரசு நாள் விழாவையொட்டி தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு அளித்த மரியாதையை முர்மு ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களின் வாகனங்கள் இடம்பெற்றன.
மகாராஷ்டிரம், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் போன்றவை தங்கள் கட்டடக் கலை, கோயில் விழாக்கள் அலங்கார ஊர்திகளில் இடம்பெற்றிருந்தன.
தமிழகம் சார்பில் வந்த அலங்கார ஊர்தியில், துறை ரீதியாக பெண்கள் மேம்பாடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அலங்கார ஊர்தியின் முகப்பில் ஒளவையார் இடம்பெற்றிருந்தார்.
பெண்கள் மேம்பாடு மற்றும் தமிழக கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் தமிழக வாகனம் ராஜவீதியில் வலம் வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.