தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

தில்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
Published on

தில்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

நாட்டின் 74-வது குடியரசு தினவிழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று காலை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து, பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்ட நிலையில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி கலந்து கொண்டுள்ளார்.

முன்னதாக செங்கோட்டைக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் மற்றும் எகிப்து அதிபரை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் வரவேற்றனர்.

மேலும், இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எகிப்து நாட்டின் 5 அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

சுமார் 65,000 பேர் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்விற்கு கமெண்டோ படை, பாதுகாப்பு படையினர் என 6,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com