அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை மதிப்புகள் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் பெரும் வீழ்ச்சியடைந்தன.
அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் டேங்க் பங்குகள் 20 சதவிகித விலை சரிந்தன.
அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் 4.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி டோட்டல் கேஸ் 20 சதவிகிதமும் அதானி டிரான்ஸ்மிஷன் 19.99 சதவிகிதமும் அதானி என்டர்பிரைசஸ் 18 சதவிகிதமும் அடிவாங்கின.
கடந்த இரு நாள்களில் அதானி குழும நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பில் 4.17 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளன.
அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று அதானி குழுமம் அறிவித்த நிலையில், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தங்களுடைய 88 கேள்விகளில் ஒன்றுக்குக்கூட அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!

பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


