பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கிய ராகுலின் நடைப்பயணம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது. 
பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கிய ராகுலின் நடைப்பயணம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது. 

காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர். 

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவும் பனிஹாலில் காந்தியுடன் இணைந்தனர். 

காந்தியைப் போல் வெள்ளைச் சட்டை அணிந்து, நூற்றுக்கணக்கான காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் அப்துல்லா நடக்கத் தொடங்கினார். 

ஸ்ரீநகரில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள பனிஹால் நெடுஞ்சாலையில் என்சி தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

ஒற்றுமை நடைப்பயணம் ராகுலை மேம்படுத்துவது நோக்கமல்ல, நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதாகும். 

நாட்டின் மீது அதீத பற்று, அக்கறை கொண்டதால் தான் பயணத்தில் இணைந்ததாக அப்துல்லா கூறினார். 

குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை ஒரு நாள் இடைவேளைக்குப் பிறகு யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.

முன்னதாக, புதன்கிழமை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ரம்பானில் பயணம் நிறுத்தப்பட்டது. 

பனிஹாலில் இருந்து, காசிகுண்ட் வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் நுழைந்து, அனந்த்நாக் மாவட்டத்தின் கானாபால் பகுதியை அடைந்து அங்கு இரவு தங்கப்படும் என்றார். 

ஸ்ரீநகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காந்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ஜனவரி 30-ம் தேதி ஷேர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் மாபெரும் பேரணியில் உரையாற்றுவதோடு இந்த அணிவகுப்பு முடிவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com