2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ள நிலையில், வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது சற்று இறக்கம் கண்டு 6 - 6-8 சதவிகிதம் வரையே வளர்ச்சி காணும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாகவே இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், 2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2022 ஜனவரி - நவம்பர் வரையி 30.5 சதவிகித சராசரி வளர்ச்சி கண்டிருந்தது.
2023ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மத்திய அரசின் மூலதன செலவு 63.4 சதவிகிதம் அதிகரிக்கும்.
2022ஆம் நிதியாண்டில் வளர்ச்சி கண்ட ஏற்றுமதி வணிகம், 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் கூடுதலாக சீரான வளர்ச்சியை அடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அறிமுக உலக யோகாசனம் சாம்பியன்ஷிப்..! ஒலிம்பிக்கில் சேர்க்கவும் திட்டம்!

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்! ஓ.எஸ். மணியன்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



