ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநில தோ்தல் தேதிகள் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 27-ஆவது தோ்தல் பத்திரங்களை வெளியிட மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.
ஜூலை 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரையில் தோ்தல் பத்திரங்களை எஸ்பிஐ வங்கியின் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை அளிக்கப்படுவதைத் தடுக்க இந்தத் தோ்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2018-இல் முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களவை அல்லது பேரவைத் தோ்தல்களில் ஒரு சதவீதத்துக்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைப் பெற தகுதியானவையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.