
உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை சேவை தொடங்க உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.
ஆறு வாரக் கோடை விடுமுறைக்குப் பின் உச்சநீதிமன்றம் இன்று செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், மணிப்பூர் கலவரம், ஆண்களுக்காக தேசிய ஆணையம் அமைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு போன்ற முக்கிய வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை சேவை தொடங்கப்பட உள்ளதாக இந்தியத் தலைமை நீதிபதி டி.ஓய் சந்திரசூட் அறிவித்துள்ளார். இதன்படி, உச்சநீதிமன்றத்தின் முதல் ஐந்து நீதிமன்ற அறைகள் வைஃபை வசதி கொண்டதாகவும், அனைத்து நீதிமன்ற அறைகளிலும் உள்ள சட்டப் புத்தங்கள் மற்றும் ஆவணங்கள் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இலவச வைஃபை சேவையை வழக்குரைஞர்கள், ஊடகவியலாளர்கள், மனுதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.