ஆன்மிகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை: பிரதமர் மோடி
நாட்டில் பல ஆன்மீக தலங்கள் புத்துயிர் பெற்றுள்ளதாகவும், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய முன்னேறி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் புட்டபர்த்தியில் சாய் ஹிரா கன்வென்ஷன் மையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மொத்த ஆன்லைன் பரிவர்த்தனையில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.
புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், 5ஜி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற துறைகளால் பெரிய நாடுகளுடன் போட்டியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருபுறம் ஆன்மீக தலங்கள் நாட்டில் புத்துயிர் பெறுகின்றன. அதேவேளையில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. உலகில் பொருளாதாரத்தில் முன்னேறிய 5 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது.
புட்டபர்த்திக்கு பலமுறை வந்துள்ளேன் ஆனால் இந்தமுறை வரமுடியவில்லை. ஆசீர்வாதம் வாங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆசீர்வாதம் வாங்குவேன் ஆனால் ஆசீர்வாதம் அளிக்கமாட்டேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட், புட்டபர்த்தியில் உள்ள கன்வென்ஷன் மையத்தில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் நிலையத்தைக் கட்டியுள்ளது. இது ரியூகோ ஹிராவின் நிதியுதவியுடன், கலாசார பரிமாற்றம், ஆன்மீகம் மற்றும் உலகளாவிய பரிமாற்றத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இங்கு மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் நடத்தப்படும். மேலும் அனைத்து தரப்பு மக்களிடையேயான உரையாடலை ஊக்குவிக்கும். இந்த நிலையம் தியான மண்டபங்கள், தோட்டங்கள் மற்றும் தங்கும் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.