

இந்திய ரயில்வே பணியாளர் சேவையின் 1998 பேட்ச் அதிகாரியான கிருஷ்ண குமார் தாக்குர் பெல் நிறுவன வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெல் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு, தாக்குர் மத்திய ரயில்வேயின் மனிதவளம் மற்றும் நிர்வாக செயல்பாட்டிற்கு தலைமை பணியாளர் அதிகாரியாக இருந்தார் என்று அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட 49 வயதான கிருஷ்ண குமார் தாக்குர், பொதுத்துறை பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
தாக்குர் மனிதவள விவகாரங்கள் மற்றும் நிர்வாகத்தைக் கையாள்வதில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இவர் பல்வேறு மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.