
உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகருக்கு வரும் வெள்ளியன்று திட்டமிட்ட மோடியின் பயணம் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மிகவும் பழமையான கீதா பத்திரிகையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருவதாலும், பிரதமர் மோடி வருகை தரவிருந்த பகுதிகள் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
படிக்க: தங்கம் விலை உயர்ந்தது: எவ்வளவு?
இதன் காரணமாக பிரதமர் மோடியின் குஷிநகர் வருகையை ஒத்திவைப்பதாக மாநில வேளாண் அமைச்சர் சூர்யா பிரதப் சாயி தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும், குஷிநகருக்கு மோடியின் வருகை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.