மூச்சுக்குழாய் அழற்சி மருந்தை திரும்பப் பெறும் சிப்லா

மூச்சுக்குழாய் அழற்சி மருந்தை திரும்பப் பெறும் சிப்லா

அமெரிக்க சந்தைகளிலிருந்து மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்கான 'அல்புடரோல் சல்ஃபேட்' என்ற உள்ளிழுக்கும் மருந்தின் 6 தொகுப்புகளை தானாக திரும்பப் பெறுவதாக இந்தியாவின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி

அமெரிக்க சந்தைகளிலிருந்து மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்கான 'அல்புடரோல் சல்ஃபேட்' என்ற உள்ளிழுக்கும் மருந்தின் 6 தொகுப்புகளை தானாக திரும்பப் பெறுவதாக இந்தியாவின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சிப்லா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் சிப்லா நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிலா-யுஎஸ்ஏ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கன்டெய்னர் குறைபாடு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் இத்தகவலை சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்ட, மூச்சுவிடுவதில் சிரமம், இருமல் போன்ற பிரச்னைகளுக்கு காரணமாக உள்ள மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 'அல்புடரோல் சல்ஃபேட்' என்ற 90 மில்லி கிராம் அளவுடைய உள்ளிழுக்கும் மருந்து கருவியின் வால்வு பகுதியில் கசிவு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், அதே வால்வுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு அமெரிக்க சந்தையில் விநியோகிக்கப்பட்ட 6 தொகுப்பு 'அல்புடரோல் சல்ஃபேட்' மருந்துகளைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்தினால் நோயாளிகளுக்கு எந்தவித தீவிர பாதிப்பும் இதுவரை பதிவாகவில்லை. எனவே, மருந்துகள் திரும்பப் பெறப்படுவதற்கு, அதுபோன்ற காரணமில்லை.

இந்த மருந்து திரும்பப் பெறப்படுவது குறித்து மருந்து விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடிதம் மூலமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. திரும்பப் பெறப்படும் அனைத்து மருந்துகளுக்கும் மாற்று வழங்கப்படும். எனவே, குறிப்பிட்ட இந்த 6 தொகுப்பு மருந்துகளை பயன்படுத்துவதை விநியோகஸ்தர்களும், வாடிக்கையாளர்களும் கைவிடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com